38
கஜா புயல் பாதிப்பு: வங்கி கடன்களின் வட்டி, அசலை திருப்பி செலுத்த 1முதல் 4 ஆண்டுகள் வரை கால அவகாசம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வங்கிகளில் வாங்கிய கடன்களின் வட்டி மற்றும் அசலை திருப்பி செலுத்த ஒரு வருடம் முதல் 4 வருடம் வரை கால அவகாசம் அளிக்கப்படும் என்று ஆட்சியர் கணேஷ் அறிவித்துள்ளார். இந்த சலுகையை பெறுவதற்கு பயிர் சேதம் 33 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
எனவே பாதிக்கப்பட்ட தென்னை உள்ளிட்ட விவசாயிகள் வங்களில் கடன் பெற்று இருப்பின் முறையாக மதிப்பீடு செய்து இச்சலுகையை பெறலாம்.