மரண அறிவிப்பு :மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சேக் அப்துல்லா அவர்களின் மகளும், மர்ஹூம் இ.மு முகமது முகைதீன் அவர்களின் மருமகளும், தேள்கொடுக்கு மர்ஹூம் ஹாஜி இ.மு ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் சகோதரியும், வா.மு அலி அக்பர், முகமது மரைக்கான் ஆகியோரின் மாமியாரும், முகமது புஹாரி, அப்துல் ரஜாக், அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தாயாரும், இபுராஹிம்ஷா, மர்ஹூம் மஹபூப் அலி ஆகியோரின் சிறிய தாயாருமாகிய ஹாஜிமா சல்மா அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜுமுஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.