Home » ஆவணியாபுரம் மாணவன் கொலையில் திடுக்கிடும் தகவல்…!

ஆவணியாபுரம் மாணவன் கொலையில் திடுக்கிடும் தகவல்…!

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள ஆவணியாபுரத்தை சேர்ந்த மும்தசர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அவரை கடத்தி சென்ற சிலர் 5 லட்ச ரூபாய் கேட்டு மும்தசரின் தாயை மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து, மும்தசரை போலீசார் தேடிவந்த நிலையில், திருபுவனம் வீரசோழன் ஆற்றிற்கு செல்லும் வழியில் மும்தசர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு புதரில் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இதையடுத்து, மும்தசரை கொலை செய்ததாக அவரது சக நண்பர்களான நியாஸ் அகமது, முகமது கலீல் மற்றும் சலீம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காதல் பிரச்சினையால் இக்கொலை நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் குற்றவாளிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter