Home » விமன் இந்தியா மூவ்மெண்டின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு….!

விமன் இந்தியா மூவ்மெண்டின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு….!

by admin
0 comment

விமன் இந்தியா மூவ்மெண்டின்(விம்) மாநில பொதுக்குழு கூட்டம் இன்று(ஜன.06) திருச்சி, டி.வி.எஸ்.டோல்கேட், எஸ்.எஸ். மஹாலில் காலை 11.00 மணியளவில் துவங்கியது.

இக்கூட்டத்தில் மாநில தலைவர் நஜ்மா பேகம் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். தேசிய செயலாளர் ரைஹானாத் அவர்கள் தேர்தல் அதிகாரியாக கலந்து கொண்டு தேர்தலை நடத்தி வைத்து உரையாற்றினார்கள்.

இக்கூட்டத்தில், எதிர்வரும் மூன்று ஆண்டிற்கான விம் அமைப்பின், மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய மாநில தலைவராக நஜ்மா பேகம், தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், மாநில பொதுச்செயலாளராக நஸீமா பானு, துணைத் தலைவராக தௌலத்தியா, செயலாளர்களாக ஃபாத்திமா கனி, காலிதா, பொருளாளராக ஈரோடு சஃபியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், நஸ்ரத் பேகம், ஆமினா, சம்சாத் பேகம், பரிதா பேகம், அஃதரி பேகம், அதிரையை சேர்ந்த வழக்கறிஞர் சஃபியா நிஜாம், ராபியா ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெண்களின் பாதுகாப்பையும், உரிமையையும் வலியுறுத்தி தேசிய பிரச்சாரம் நடத்துவது எனவும், முத்தலாக் மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்றும், கர்ப்பிணி பெண்களுக்கு எச்.ஐ.வி. தொற்று ரத்தம் – அரசு மருத்துவத்துறையின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அம்ஜத் பாஷா, பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter