கடந்த ஜனவரி 1ஆம் தேதி 2019 முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யவும், உபயோகிக்கவும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டது.
அரசின் உத்தரவை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(08/01/2018) செவ்வாய்க்கிழமை மாலை 5மணியளவில் அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் சிலர் பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, அதிராம்பட்டினம் பகுதியில் இயங்கி வரும் கிங் ஷாப்பிங் மாலில் மாவுகள் மற்றும் மளிகை பொருட்கள் சில(காய்ந்த மிளகாய்) பிளாஸ்டிக் பைகளில் விற்பனை செய்ததை கண்டறிந்தனர்.
இதனையடுத்து, உணவுப்பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டிருந்ததை கண்ட அதிகாரிகள் இதுபோல் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கக்கூடாது என்றும் மீறினால் கடையின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தலுடன் கூடிய அறிவுரையை வழங்கினர்.
இந்த அறிவிப்பு அதிரையில் உள்ள அனைத்து கடைகளுக்கு அடங்கும் எனவும் கூறினார்.