Thursday, September 12, 2024

ராகுல் காந்தியின் துபாய் சொற்பொழிவில் திரளான மல்லிப்பட்டிணம் இளைஞர்கள் பங்கேற்பு(படங்கள்)..!

spot_imgspot_imgspot_imgspot_img

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள் மத்தியில் நேற்று (11/01/2019) உரை நிகழ்த்தினார். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அரங்கமே மக்கள் வெள்ளத்தால் மூழ்கியிருந்தது. அது மட்டுமல்லாது அரங்கிற்கு வெளியிலும் கூட்டம் கூட்டமாய் பேச்சை கேட்க திரண்டு இருந்தனர்.

ராகுல் காந்தியின் இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக மாலை பிரமாண்ட கூட்டம் தொடங்கும் முன்பு அடிமட்ட தொழிலாளர் வர்க்கம் அதிகம் வசிக்கும் பகுதியான ஜெபல் அலி பகுதியில் அம்மக்கள் மத்தியில் உரையாற்றியது மட்டுமல்லாமல் அவர்களுடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் உரையின் துவக்கத்தில் ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளர்கள் காட்டும் பணிவு,சகிப்புத்தன்மை ஆகியவற்றை பாராட்டினார். அதனை தொடர்ந்து இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக சகிப்புத்தன்மையற்ற சூழல் நிலவி வருவதாகவும், வேலையில்லா திண்டாட்டமும், விவசாயிகள் வாழ்வாதாரம் நசுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். அதனை சீர்ப்படுத்த வேண்டுமெனில் வெளிநாட்டில் வேலை செய்யும் உங்களை போன்ற துடிப்புள்ள இளைஞர்கள் தாய் நாடு திரும்பி எங்களோடு பணி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் திரளான மல்லிப்பட்டிணம் வெளிநாடுவாழ் மக்கள் கலந்துகொண்டு தங்களுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஜப்பானில் இஃப்தார் நிகழ்ச்சி..! திரளான அதிரையர்கள் பங்கேற்பு…!!

புனிதமிகு ரமலான் மாதத்தில் ஜப்பான் வாழ் அதிரை குடும்பங்கள் உட்பட சுமார் 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இஃப்தார் சந்திப்பு நிகழ்வு நேற்று(07-04-24) ஞாயிற்றுக்கிழமை...

ஜப்பானில் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி! 100க்கு மேற்பட்டோர் பங்கேற்பு!

ஜப்பான் வாழ் அதிரை குடும்பங்கள் உட்பட சுமார் 120 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இஃப்தார் சந்திப்பு நிகழ்வு நேற்று 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை ...

அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி!(படங்கள்)

அதிராம்பட்டினம் பைத்துல்மாலின் கிளைகள் பல்வேறு நாடுகளில் வெளிநாடுவாழ் அதிரை சகோதரர்களால் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் சார்பில்...
spot_imgspot_imgspot_imgspot_img