Home » அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவ பேரவையினர் இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி…!

அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவ பேரவையினர் இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி…!

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை தமிழ்நாடு மீனவ பேரவை மாநில தலைவர் அன்பழகன் வழங்கினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மற்றும் தஞ்சை மாவட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக கல்வி உபகரண பொருட்களை இன்று(ஜன 13) வழங்கினார்.மேலும் அவர் அதிரை எக்ஸ்பிரஸிடம் தெரிவிக்கையில் அரசு வழங்கிய நவாரண பொருட்கள் இதுவரை மக்களுக்கு சென்றடையவில்லை,விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளுக்கு போதுமான இழப்பீடுகள் தரப்படவில்லை,மேலும் மீனவர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக தமிழ்நாடு மீனவ பேரவை இருக்கும் என்று உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைப்பின் மாநில செயலாளர் AK.தாஜூதீன்,AK.சேக் அப்துல்லா,கள்ளிவயல் மீனவ சங்கத்தை சேர்ந்த கபீர், இப்ராகிம்,கரையூர் தெரு தலைவர் வீரபத்திரன், செயலாளர் JK.குமார்,பொருளாளர் குமரன் மற்றும் பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter