Home » அமீரகத்தில் இறந்தவரின் உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த தமுமுக…!!

அமீரகத்தில் இறந்தவரின் உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த தமுமுக…!!

0 comment

தஞ்சை மாவட்டம்;பட்டுக்கோட்டை, முதலச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 41). இவர் அமீரகத்தில் (சவுதி-ரியாத்) உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

பணியில் இருக்கும்பொழுது திடீரென்று எதிர்பாராத விதமாக கடந்த (22/12/2018) அன்று ஆரோக்கியசாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் ஆரோக்யசாமியை கடந்த (22/12/2018) அன்று அமீரகத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்த ஆரோக்கிய சாமிக்கு அனிதா (வயது 33) மனைவியும், நேசன்னா (வயது 15) சர்வீன் (வயது 14) சக்தி (வயது 9) என்கிற மகள்கள் உள்ளார்கள்.

இறந்த ஆரோகியசாமியின் உடலை உறவினர்கள் கேட்டு கொண்டதர்க்கினங்க தமுமுக சவுதி ரியாத் மண்டலம் சார்பாக உடலை பெற்று சவுதியிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருச்சி தமுமுக சார்பில் மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் தலைமையில் மாவட்ட பொருளாளர் முஹம்மது ராஜா, மனிதஉரிமை செயலாளர் சிராஜூதீன், மருத்துவ சேவை அணி பொருளாளர் முஹம்மது தல்ஹா, தொண்டரணி செயலாளர் ரஹீம், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அஹம்மது ஹாஜா மற்றும் திருச்சி விமான நிலையத்தின் கிளை நிர்வாகிகள் ஆகியோர்கள் அமீராகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஆரோக்கியசாமியின் உடலை இன்று (16.01.2019) காலை 9 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து தமுமுக அவசர ஊர்தி மூலம் ஆரோக்கியசாமியின் உடலை சொந்த ஊரான பட்டுக்கோட்டை அருகேயுள்ள முதலச்சேரி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் தமுமுக நிர்வாகிகள் உடலை ஒப்படைத்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter