54
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் பகுதிக்கு அருகே இருசக்கர வாகன விபத்திற்குள்ளானது.இதில், இருவர் படுகாயம் அடைந்தார்.
மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் பகுதி அருகே இன்று(17/01/2018) மாலை சுமார் 6:30மணியளவில் இருசக்கர வாகனத்தில் நடிவிக்காடு பகுதியை சேர்ந்த குமரவேல் மற்றும் அவருடைய நண்பர் ஒருவரும் மது போதையில் நிலை தடுமாறி திடீரென விபத்திற்குள்ளாகினர்.
மதுபோதையில் விபத்திற்குள்ளாகி பலத்த காயமுற்று உயிருக்கு போராடி கொண்டிருந்த இருவரையும் TNTJஅவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.