Home » பாஜகவில் சில ரசிகர்கள் இணைந்த நிலையில் நடிகர் அஜித் அதிரடி அறிக்கை…..!

பாஜகவில் சில ரசிகர்கள் இணைந்த நிலையில் நடிகர் அஜித் அதிரடி அறிக்கை…..!

by admin
0 comment

நேற்றைய தினம் பாஜகவில் அஜித் ரசிகர்கள் இணைந்த நிலையில் இன்று அஜீத் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் மீது தொடர்ந்து வந்த வதந்திகளுக்கும் பாஜகவினர் அஜீத்தை வைத்து அரசியல் செய்ய முற்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கும் முற்றுப் புள்ளி வைத்துள்ளார் அஜீத்.

நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். சினிமாதான் எனது தொழில் என்பதைப் புரிந்து வைத்துள்ளேன். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று நடிகர் அஜீத் குமார் கூறியுள்ளார். மேலும் தனது பெயரையோ அல்லது படத்தையோ எந்த ரசிகரும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்றும் அதிரடியாக கூறியுள்ளார் அஜீத்.

நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருப்பவன். என்னுடைய தொழில் நடிப்பு என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்துள்ளேன். எனது ரசிகர் மன்றங்களைக் கலைத்தது கூட இந்தப் பின்னணியில்தான்.

அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. ஆனால் அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என் மீது திணிக்க விட்டதும் இல்லை. என் ரசிகர்களிடம் இதையேதான் நான் எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும். என் பெயரோ அல்லது என் புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்வில் இடம் பெறுவதை நான் சற்றும் விரும்புவதில்லை.

நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம், மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமையை செவ்வனே செய்வதும், சட்டம் ஒழுங்கை மதித்து நடந்து கொள்வதும் ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும், வேற்றுமை களைந்து ஒற்றுமையுடன் இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும், ஆகியவைதான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு.வாழு வாழ விடு என்று கூறியுள்ளார் அஜீத்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.இந்த அறிக்கையை வைத்து நெட்டிசன்கள் பாஜக தலைவர் தமிழிசியை கலாய்த்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter