தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் மற்றும ஆண்டிக்காடு ஊராட்சிக்குட்பட்ட வடக்கு தெரு மற்றும் காசிம் அப்பா தெரு பகுதிகளில் அடிப்படை வசதி இன்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
வடக்கு தெரு,காசிம் அப்பா தெரு பகுதிகளில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாமல் இருட்டான பகுதியாக காட்சி தருகிறது.இதன் காரணமாக பொதுமக்கள் நடமாடுவதற்கு அச்சப்படுகின்றனர்.மேலும் இப்பகுதிகளுக்கு தண்ணீர் குழாய்கள் இருந்தும் காட்சி பொருளாக மட்டுமே இருக்கிறது என்றும், கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் வசதியின்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் குப்பைகள் கொட்டுவதற்கென எந்தவொரு குப்பை தொட்ட வசதியும் இல்லாததால் பொதுமக்கள் வீதியிலே கொட்டிவிடுகின்றனர். இதனால் சுகாதர சீர்கேடுகள் ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்த போதும் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியப் போக்கை கடைபிடித்தே வருகின்றனர், அடிப்படை வசதிகளை இப்பகுதிகளுக்கு செய்து கொடுக்காமல் அதிகாரிகள் புறக்கணிப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.