98
தஞ்சாவூர் மாவட்டம்,அதிரை அருகே மகிழங்கோட்டையில் நேற்று (ஜன 27) காங்கிரஸ் கட்சியின் குடியரசு தினவிழா மற்றும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.இக் கூட்டத்தில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் முன்னாள் பொதுச்செயலாளர் கே.மகேந்திரன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். பேராவூரணி சட்டமன்ற ராஜிவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சங்க வட்டார ஒருங்கிணைப்பாளர் மல்லிப்பட்டிணம் அ.நூருல் அமீன் கிராம பஞ்சாயத்துகள் குறித்து உரையாற்றினார்.
மேலும் இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.