Home » உளுந்தூர்பேட்டையை உலுக்கிய TNTJவின் திருக்குர்ஆன் மாநாடு !

உளுந்தூர்பேட்டையை உலுக்கிய TNTJவின் திருக்குர்ஆன் மாநாடு !

0 comment

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருக்குர்ஆன் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவர் எம்.ஷம்சுல்லுஹா, பொதுச்செயலர் இ.முகம்மது, மேலாண்மை குழுத் தலைவர் எம்.எஸ்.சுலைமான், மேலாண்மைக் குழு உறுப்பினர் கே.எம்.அப்துல் நஸீர், மாநிலச் செயலர் ஆர்.அப்துல் கரீம், பேச்சாளர்கள் ஆர்.ரஹ்மத்துல்லா, எம்.ஐ.சுலைமான், கே.எஸ்.அப்துர் ரஹ்மான், மாநில பொருளாளர் கே.சித்திக் உள்பட பலர் மாநாட்டில் பேசினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : திருக்குர்ஆன் மனித குலம் முழுமைக்கும் நேர்வழி காட்டுவதற்காக அல்லாஹ்வால் அருளப்பட்டது. திருக்குர்ஆன் போதனைகளை முஸ்லிம்கள் தங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பதுடன், முஸ்லிம் அல்லாதவரிடத்திலும் போதனைகளைக் கொண்டு சென்று, அவர்களையும் திருக்குர்ஆனை தங்கள் வாழ்வில் நெறியாக ஏற்கச் செய்ய பாடுபட வேண்டும்.
திருக்குர்ஆன் மாநாட்டுக்காக உழைத்ததுடன் நமது கடமை முடியவில்லை. திருக்குர் ஆனின் போதனைகளை உலக மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், இணை வைப்பு என்னும் மாபெரும் தீமையிலிருந்து முஸ்லிம்களை மீட்டெடுக்கும் கடமையை நாம் மரணிக்கும் வரை செய்துவர வேண்டும். இறை தூதர்கள் இந்தப் பணியை செய்த போது சந்தித்த இன்னல்களைக் கண்டு, அவர்கள் மனம் தளராமல் உறுதியாக நின்று பிரசாரம் செய்ததை முன்மாதிரியாகக் கொண்டு அனைத்து மக்களுக்கும் ஓர் இறை கொள்கையை சொல்ல வேண்டும். முத்தலாக் தடைச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழகம், புதுவையில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை கூடுதலாக்க வேண்டும். இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter