Home » “பிரதமர் நேர்மையாக இருந்தால் மோசடியாளர்கள் யாரும் ஓடமாட்டார்கள்”- அருண் ஜெட்லி சர்ச்சை ட்வீட் !

“பிரதமர் நேர்மையாக இருந்தால் மோசடியாளர்கள் யாரும் ஓடமாட்டார்கள்”- அருண் ஜெட்லி சர்ச்சை ட்வீட் !

0 comment

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தற்போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை எடுத்துவரும் நிலையில், வங்கி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர்களைப் பற்றி சர்ச்சை ட்வீட் ஒன்று பதிவு செய்துள்ளார்.

மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி தற்போது அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால், அவர் இலாகா இல்லாத அமைச்சராக அறிவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பாக நிதித்துறை ஒதுக்கப்பட்டது.

இன்று மத்திய பட்ஜெட்டையும் பியுஷ் கோயலே தாக்கல் செய்ய இருக்கிறார். இந்நிலையில், வங்கி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர்களைப் பற்றி அருண் ஜெட்லி பதிவிட்டுள்ள ட்விட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“பிரதமர் நேர்மையாக இருந்தால், அவர் தனது ஆட்சியில் நேர்மையான கலாசாரத்தை அறிமுகப்படுத்தினால், ஒருவரும் இந்தியாவில் மோசடி செய்து விட்டு தப்பி ஓடமாட்டார்கள்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தற்போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை எடுத்துவரும் நிலையில், வங்கி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர்களைப் பற்றி சர்ச்சை ட்வீட் ஒன்று பதிவு செய்துள்ளார்.

மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி தற்போது அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால், அவர் இலாகா இல்லாத அமைச்சராக அறிவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பாக நிதித்துறை ஒதுக்கப்பட்டது.

இன்று மத்திய பட்ஜெட்டையும் பியுஷ் கோயலே தாக்கல் செய்ய இருக்கிறார். இந்நிலையில், வங்கி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர்களைப் பற்றி அருண் ஜெட்லி பதிவிட்டுள்ள ட்விட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“பிரதமர் நேர்மையாக இருந்தால், அவர் தனது ஆட்சியில் நேர்மையான கலாசாரத்தை அறிமுகப்படுத்தினால், ஒருவரும் இந்தியாவில் மோசடி செய்து விட்டு தப்பி ஓடமாட்டார்கள்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

அதற்கு முந்தைய ட்வீட்களில், இந்தியாவில் இருந்து மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓட முடியாது. அந்த அளவுக்கு இந்தியாவின் தூதரக உறவுகள் இருப்பதாக அவர் பதிவு செய்துள்ளார்.

இது அனைவரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கி மோசடி விவகாரத்தில் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோஸ்கி உள்ளிட்டோர் வெளிநாட்டுக்குச் சென்று தஞ்சமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter