அதிராம்பட்டினம் சி எம் பி லைனில் கிட்டதட்ட ஆயிரக்கனக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த பகுதியில்தான் அதிரையின் பெரும்பாலன குளங்களை நிரப்பும் சி எம் பி கால்வாய் அமையப்பெற்றுள்ளது.
இதனை சுயனலமிக்க அப்பகுதிவாழ் மக்கள்.கழிவு நீர் கால்வாயாக மாற்றியுள்ளனர்.
இதனை தடுக்க தன்னார்வ தொண்டு அமைப்புகள் எவ்வளவோ முயன்றும் பலனில்லை இது ஒருபுறம் இருக்க கடந்த சில நாட்களாக அதிரையில் பரவிவரும் டெங்குவை கட்டுபடுத்த அரசு,தான்னார்வ அமைப்புகள் பல்வேறு திட்ட பணிகளை மேற்கொண்டனர்.
அதன் ஒருபகுதியாக சி எம் பி லைன் வாய்க்கால்லை சுத்தம் செய்து விடுவது என்பது.
அதன்படி கால்வாய் சுத்தம் (?)செய்து பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் அள்ளப்பட்ட கழிவு மணல்கள் கரையோரம் கொட்டப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் பார்ப்பதற்கு குப்பைமேடாக காட்சியளிக்கிறது.
எனவே சம்பந்தப்பட்ட தன்னார்வ அமைப்பு பேரூராட்சி உதவியுடன் கழிவு மணல்களை அகற்றுவதுடன், ஆற்றில் கலக்கும் கழிவு நீருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.