186
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் கார்,வேன்,சுமோ வாகனங்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் இன்று(பிப் 5) ஈடுபட்டன.
காவல்துறையினரின் தவறான அணுகுமுறையால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுவதாக என்று வீடியோவில் பதிவு செய்துவிட்டு சென்னையை சேர்ந்த ராஜேஷ் என்ற ஓட்டுனர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதிரை பேருந்து நிலையத்தில் உள்ள கார்,வேன்,சுமோ ஓட்டுனர் நலசங்கத்தின் சார்பில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.