மனிதநேய மக்கள் கட்சி ஆரம்பித்து 10 ஆண்டுகளை கடந்துள்ளது. அக்கட்சியின் 11ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் கட்சியின் கொடிக்கம்பங்கள் பழுது பார்க்கப்பட்டு அதில் கட்சியின் கொடி ஏற்றிவைக்கப்பட்டு வருகிறது. கடந்த 7ம் தேதி சென்னை மண்ணடியில் உள்ள தமுமுக மமக தலைமையகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் மமக-வின் 11ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு அதிரையில் உள்ள அக்கட்சியின் கொடிக்கம்பங்களில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை(09.02.2019) நடைபெற்றது. இக்கொடியேற்றும் நிகழ்வில் அக்கட்சியின் கிளை நிர்வாகிகள், முன்னாள் இன்னாள் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.