அதிரை தரகர் தெருவை டெங்கு காய்ச்சலை விட்டு காப்பாற்ற பேரூராட்சி மறந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.
விரிவான செய்தி :-
அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு தரகர் தெருவில் பெரும் சுகாதார சீர்கேடு நடைபெற்று வருகிறது. அதிரை மட்டுமின்றி தமிழகம் எங்கும் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் நிலையில் அப்பகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அப்பகுதியில் அல்லப்படாமல் இருப்பதால் வீட்டு கழிவு தண்ணீர் ஓடும் சாக்கடை(வாய்க்காலில்)அடைத்துக்கொண்டு கழிவு நீர் வெளியே ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் அளவு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.இதனை கருத்தில் கொண்டு உடனடியாக அப்பகுதியை சுத்தம் செய்ய அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.