46
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மௌலவி ஹுசைன் மன்பயீ அவர்கள் வருடா வருடம் ரமலான் மாதத்தில் சிறப்பு பயான்களில் பொதுமக்களுக்கான பல்வேறு இஸ்லாம் சார்ந்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில் உரையாற்றுவார்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் பெரியார்கள் என பலர் கலந்துகொள்ளுவது வழக்கமே..,
இதனால் பலர் இஸ்லாமிய மார்க்க ரீதியான சந்தேகங்களுக்கு மூன்றுபுள்ளி வைத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் அதிராம்பட்டினம் A.L.ஜூம்மா பள்ளிவாசலில் மௌலவி ஹுசைன் மன்பயீ அவர்கள் “போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள்” என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.
இந்நிகழ்வில், இஸ்லாமிய பெருமக்கள் கலந்துகொண்டு இஸ்லாமிய மார்க்க ரீதியான சொற்பொழிவை கேட்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.