ஆஸ்திரேலியாவில் உள்ள சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட முஹல்லாவாசிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று ஹோபன் பார்க்கில் நடைபெற்றது. இதில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் செயலாளர் பேராசிரியர்.ஹாஜி. அப்துல் காதர் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட முஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது கஜா புயலின் போது சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் மூலம் செய்யப்பட்ட பணிகள், சங்கத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் சங்கத்திக்குற்பட்ட பகுதிகளில் வறுமையை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட முஹல்லாவாசிகள் அனைவருக்கும் உணவு ஏற்பாடும் செய்யப்பட்டது.