Home » தமிழகத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் !

தமிழகத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் !

0 comment

தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாக அவர் சுகாதாரத்துறை செயலராக பதவி வகித்து வந்தார். இதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் திருச்சி, கோவை, புதுக்கோட்டை ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்ற விவரம் :

◆பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பேரிடர் மேலாண் இயக்குனராக மாற்றம்

◆ஓமியோபதி ஆணையராக இருந்த பியூலா ராஜேஷ் சுகாதாரத்துறை செயலராக மாற்றம்

◆திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கோவை ஆட்சியராக மாற்றம்

◆சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றம்

◆திருச்சி மாவட்ட ஆட்சியராக எஸ்.சிவராசு நியமனம்

◆ஐஏஎஸ் அதிகாரி நாகராஜனுக்கு சுகாதாரத்துறை திட்ட இயக்குநராக நியமனம்

◆கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை சிறப்பு செயலாளராக நியமனம்

◆வணிகவரித்துறை முதன்மை செயலாளர் பாலச்சந்திரன், பதிவுத்துறை ஐஜி ஆக இடமாற்றம்

◆தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, புதுக்கோட்டை ஆட்சியராக பணியிட மாற்றம்

◆புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், இந்திய மருத்துவ இயக்குநராக பணியிட மாற்றம்

◆பத்திரப்பதிவு ஐ.ஜி குமரகுருபரன், பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம்

◆நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம்

◆கோவை மாநகராட்சி கே.விஜயகார்த்திகேயன் தமிழ்நாடு ஊரக கல்வி நிறுவன இயக்குநராக மாற்றம்

◆தமிழ்நாடு குடிநீர், வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த், திருவாரூர் ஆட்சியராக மாற்றம்

◆சுகாதாரம், குடும்ப நலத்துறை கூடுதல் இயக்குநர் நாகராஜன், சுகாதார அமைப்பு திட்ட இயக்குநராக மாற்றம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter