தஞ்சை மாவட்டம் விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் இன்று (பிப் 19) மல்லிப்பட்டிணம் துறைமுக புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் AK.தாஜுதீன் தலைமை வகித்தார்.மாவட்டத்தலைவர் இராசமாணிக்கம்,மாவட்ட செயலாளர் வடுகநாதன்,சங்க நிர்வாகிகள் செல்லக்கிளி,மருதமுத்து மற்றும் இப்ராஹீம் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு கூட்டத்தில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி சேதம் மற்றும் முழு சேத விசைப்கடகுகளுக்கு பழைய அரசு விதிப்படி வழங்கப்படும் நிவாரண தொகையானது பழைய படகுகள் கூட வாங்க இயாலது என்றும்,இது எங்களின் வாழ்வாதரத்தை சீரழிப்பதற்கு ஒப்பாகும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு அறிவிக்கப்பட்ட தொகையை உயர்த்த கோரி முதலமைச்சர், அமைச்சர், அதிகாரிகள் என பலரையும் நேரில் சந்தித்தும்,மனுக்கள் அளித்தும் அரசு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவது, கஜா புயல் பாதிப்பால் 15 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை இழந்ததை தெரிந்தும் செயல்பட்டு வருகிறது.கஜா புயலால் நொறுங்கப்பட்ட படகுகளை அரசே ஏற்று நஷ்ட ஈடு தருமாறு கேட்டுக் கொள்கிறது.
படகுகளுக்கு நிவாரணம் வழங்கும் வரையிலும்,புதிய படகுகள் வாங்கும் வரையிலும் துறைமுக கட்டுமான பணியை நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நிவாரணத் தொகை வழங்காமல் காலதாமதம் செய்து வரும் அரசை கண்டித்து மல்லிப்பட்டிணம், சேதுபவாசத்திரம் ஆகிய ஊர்களில் வருகிற மார்ச் 3ல் சாலை மறியல் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரை மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்றும் தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார் தலைமையிலும், இப்போராட்டங்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும் பெறுவது என்று முடிவு செய்யபட்டு உள்ளது.
முழுபடகுகளுக்கும் நிவாரண தொகை கிடைக்காத வரை எந்தவொரு படகும் கடலுக்கு செல்ல கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் 50க்கும்மேற்பட்ட விசைப்படகுகளின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்