Home » காஷ்மீர் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்…பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

காஷ்மீர் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்…பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

0 comment

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதனையடுத்து, காஷ்மீரின் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை அரசு திரும்ப பெற்றது. இந்த தாக்குதல் சம்பவத்தால், நாடு முழுவதும் உள்ள காஷ்மீரிகள் மீது ஆங்காங்கே தாக்குதல் நடத்தப்பட்டன.

அந்த வகையில், பெங்களூரில் உள்ள பிரபல கல்லூரில் படிக்கும் காஷ்மீரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தாஹீர் ஷசாத் லத்தீஃப் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவர்கள் அளித்த புகாரின் அப்படையில் அந்த மாணவன் கைது செய்யப்பட்டான். அதே போல், மகாராஷ்டிர மாநிலத்தில் விடுதியில் தங்கி, கல்லுாரிகளில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் மீது, சிவசேனா கட்சியினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இதே போல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அப்பாவி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், ஜம்மு – காஷ்மீர் மாணவர்கள் மீதான தாக்குதலை தடுக்க கோரி தாரிக் ஆதீர் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காஷ்மீர் மாணவர்களை துன்புறுத்துவதை அனுமதிக்க கூடாது என்றும் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விளக்கமளிக்க ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட், ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார், மேகாலயா, சட்டீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 10 மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காஷ்மீரை சேர்ந்த மாணவர்களுக்கு நாடு முழுக்க உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter