73
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. ஆனால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதை சில அதிமுகவினர் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக சிறுபான்மை அணியின் மாவட்ட செயலாளர் நடுக்கடை ராஜா முகம்மது, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
திமுகவின் தஞ்சை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், நடுக்கடை ராஜா முகம்மது தலைமையில் 400க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அதிலிருந்து விலகி, திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.