Home » நாளை தொடங்குகிறது +2 பொதுத்தேர்வு ~ 8,61,107 பேர் எழுதுகின்றனர் !

நாளை தொடங்குகிறது +2 பொதுத்தேர்வு ~ 8,61,107 பேர் எழுதுகின்றனர் !

0 comment

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்க உள்ளது.

நாளை தொடங்கி மார்ச் 19 ஆம் தேதி வரை நடைபெறும் 12ஆம் வகுப்பு தேர்வை 8,61,107 பேர் எழுதுகின்றனர்.

இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,941 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு 150 மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.

12ஆம் வகுப்பு தேர்வு முடிகள் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியிடப்படுகின்றன. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க தேர்வு காலங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை செயல்படக்கூடிய வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் புகார்களை, கருத்துக்களை தெரிவிக்க 9385494105, 9385494115, 9385494120, 9385494125 என்ற எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் பாடம் ஒன்றுக்கு 200 மதிப்பெண்கள் என 1200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்று வந்த நிலையில், இந்தாண்டு பாடம் ஒன்றுக்கு 100 மதிப்பெண் வீதம் 600 மதிபெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.

அதேபோன்று, மொழிப்பாடங்களுக்கு இரண்டு தாள் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, இந்த ஆண்டு ஒரே தாளாக தேர்வு நடைபெறுகிறது.

தேர்வு அறைகளில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், முறைகேடுகளில் ஈடுபடும் பள்ளிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter