174
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் 64-வது விளையாட்டு விழா இன்று வியாழக்கிழமை(28.02.2019) கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கல்லூரி செயலர் அபுல் ஹஸன் தலைமை தாங்கினார். பட்டுக்கோட்டை டிஎஸ்பி கணேசமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இவ்விளையாட்டு விழாவில் கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சார்ந்த பல்வேறு மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கல்லூரியின் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.