41
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட வாய்க்கால் தெருவில் குப்பைகள் குவிந்து அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.
அதிரை வாய்க்கால் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. ஆனால் கொட்டப்பட்ட குப்பைகள் நீண்ட நாட்களாக அள்ளப்படாமல் சிதறி கிடக்கின்றது.
பொதுமக்களும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் அச்சாலை வழியையே சென்று வருகின்றனர். ஆனால் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசி வருவதால், அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே அதிரை பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் விரைந்து குப்பைகள் அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.