Home » அதிரை துலுக்காப்பள்ளி புதிய நிர்வாகத்திற்கு கோரிக்கை !!

அதிரை துலுக்காப்பள்ளி புதிய நிர்வாகத்திற்கு கோரிக்கை !!

0 comment

அதிராம்பட்டினத்தில் உள்ள துலுக்கப்பள்ளி, தற்போது மஸ்ஜிதுத்தக்வா இறையச்சப்பள்ளி என பெயர் மாற்றத்தோடு ஐங்கால தொழுகைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் முன்பு ஏற்பட்ட கசப்பான நிர்வாகத் திறன்மின்மையாள் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்கள்.

ஆனால் தற்போதுள்ள நிர்வாகம் அவ்வாறு செயல்படாது என நம்புவதாக அப்பகுதி முஹல்லா வாசிகளின் ஒட்டுமொத்த கருத்தாகும்.

இந்நிலையில் தக்வாபள்ளிக்கு சொந்தமான மீன் மார்கெட் மேற்கூரை கடந்த கஜாபுயலால் அடித்து செல்லப்பட்ட நிலையில், புதிய கூறை அமைக்க எற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

மேலும் இந்த கூரை அமைக்கும் ஒப்பந்தத்தை ஒருவருவருக்கு ஒப்படைக்க உள்ளதாக தெரிய வருகிறது. பொது விவகாரங்களில் ஈடுபடுவோர் அப்பகுதியில் உள்ள தகுதிவாய்ந்த நிறுவங்களிடமிருந்து ஒப்பந்த புள்ளிகளை கோரலாம், இதனால் நல்ல தரமும் நியாய விலையிம் தரக்கூடிய ஒப்பந்ததாரர்கள் மூலம் பனிகளை நிவர்த்தி செய்வதால் தேவையற்ற சர்ச்சைகள் நீங்கி நிம்மதியான நிர்வாக அலுவல்களை மேற்கொள்ளாம்.

ஆகவே பொது ஒப்பந்த கோரலை பள்ளிவாசலின் அறிவிப்பு பலகையில் ஒட்டி ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு குறைந்த செலவில் நிறைந்த தரத்துடன் செய்து தரக்கூடிய ஒப்பந்த தாரர்களை தேர்வு செய்திடலாம்.

இதனால் பெரிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதுடன், கறையில்லாத புதிய நிர்வாகம் என்ற அந்தஸ்த்தை பெறலாம் !

நிறைவேற்றுமா ? புதிய நிர்வாகம் !

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter