83
தமிழகம் முழுவதும் இன்று(10.03.2019) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் இன்று காலை முதல் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
அதிரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், சங்கங்கள், அங்கன்வாடி நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.
5 வயத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றும், ஏற்கனவே பலமுறை போலியோ சொட்டு மருந்து போடப்பட்டிருந்தாலும் பரவாயில்லை, மீண்டும் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.