41
அதிராம்பட்டினம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அம்மா பேரவை சார்பாக 12/03/2019 இன்று காலை அதிரை அம்மா பேரவை தலைவர் ரா.மகேந்திரன் தலைமையில் அலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்யும் முறை,மற்றும் வியூகம் பற்றி நகர அம்மா பேரவைச்செயலாளர் சு.முகம்மது அவர்கள் உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் நகர துணைத் தலைவர் நஷீர் அகமது, நகர இணைச்செயலாளர்கள் இஸ்மாயில், லோகநாதன், பாலா திருநாவுக்கரசு, துணைச் செயலாளர்கள் பாலமுருகன், முகமது அலி, ராஜேஷ், பொருளாளர் ராஜா முகமது மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். இறுதியில் இணைச்செயலாளர் இஸ்மாயில் அவர்கள் நன்றியுரையுடன் இனிதே நிறையுற்றது.