விரைவில் தேர்தல் வரப்போகிறது. இதற்காக எல்லா கட்சிகளும் தீவிரமாக களப்பணியில் இறங்கி உள்ளன. தேர்தலுக்கான பிரச்சாரத்தை எப்படியெல்லாம் முன்னெடுக்கலாம் என்று யோசனையில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஒரு சூடான தகவல் பரவி வருகிறது. தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு 3 பேர் வரப்போகிறார்களாம். அந்த 3 பேருமே வடமாநில பாஜக தலைவர்கள்! அவர்கள், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோஜர் ஜோஷி ஆகியோர்தான் !
இவர்களில் 2 முதல்வர்களும், தங்களது மாநிலத்தில் நடந்த தேர்தலின்போது, பிரச்சாரத்திற்கு என்னவெல்லாம் ஸ்கெட்ச் போட்டு மக்களிடம் கொண்டு சென்று, வெற்றி வாகை சூடினார்களோ, இப்போது அதையே தமிழகத்தில் களமிறக்க முடிவு செய்துள்ளார்களாம். மேலும் அந்தந்த மாநிலங்களில் தாங்கள் கொண்டு வந்துள்ள சிறப்பு மற்றும் மக்களிடம் பிரபலமான திட்டத்தையும் தமிழகத்தில் கொண்டு வருவது குறித்தும் பிரச்சாரம் செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது.
அது மட்டுமில்லை.. சமீபத்தில் உபி முதல்வர் யோகி பிற மாநிலங்களில் செய்த பிரச்சாரத்தினால் வெற்றி பெற முடிந்ததாம். அதனால் அதே சென்ட்டிமென்ட்டுக்காக யோகியை தமிழகத்திற்கு வரவழைத்து பிரச்சாரம் செய்தால் வொர்க் அவுட் ஆகும் என்று பாஜக தலைமை நினைக்கிறதாம். அதனால்தான் இந்த 3 பேரும் தமிழகத்துக்கு பாஜக சார்பில் பிரச்சாரம் செய்ய போவதாக ஒரு தகவல் வருகிறது. இவர்கள் 3 பேரும் வந்து தாமரையை மலர வைக்கிறார்களா என்று பார்ப்போம்.. ஆனா இந்த தாமரையை மலர வைக்க இன்னும் என்னெல்லாம் செய்யணும்னு தெரியலையே !