அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளது. இதற்கிடையில் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை வெளியிட்டுள்ளார். மேலும் சட்ட மன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 24 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.