Home » மக்களவை தேர்தல் 2019 – வெளியானது திமுக வேட்பாளர் பட்டியல் !!

மக்களவை தேர்தல் 2019 – வெளியானது திமுக வேட்பாளர் பட்டியல் !!

0 comment

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் பம்பரமாய் சுழன்று வருகின்றனர். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு என தமிழக அரசியல் களமே பரபரத்து காணப்படுகிறது. அமமுக இன்று தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிரடி காட்டியது.

இந்நிலையில் இன்று மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் வேட்பாளர் பட்டியலை மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். முன்னதாக வேட்பாளர் பெயர் பட்டிலுடன் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வீட்டிற்குச் சென்று அவரிடம் வேட்பாளர் பட்டியலை காண்பித்தார்.

நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியல் :

வட சென்னை – கலாநிதி வீராசாமி

தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்

மத்திய சென்னை – தயாநிதி மாறன்

காஞ்சிபுரம் – செல்வம்

ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர். பாலு

அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்

வேலூர் – கதிர் ஆனந்த்

தருமபுரி – டாக்டர் செந்தில் குமார்

கள்ளக்குறிச்சி – கவுதம சிகாமணி

திருவண்ணாமலை – சி.எஸ். அண்ணாதுரை

சேலம் – எஸ்.ஆர். பார்த்திபன்

நீலகிரி – ஆ. ராசா

பொள்ளாச்சி – சண்முகசுந்தரம்

திண்டுக்கல் – வேலுச்சாமி

கடலூர் – ரமேஷ்

மயிலாடுதுறை – இராமலிங்கம்

தஞ்சாவூர் – எஸ்.எஸ். பழனிமாணிக்கம்

தூத்துக்குடி – கனிமொழி

தென்காசி – தனுஷ் குமார்

திருநெல்வேலி – ஞானதிரவியம்

சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள் :

பூந்தமல்லி – அ. கிருஷ்ணமூர்த்தி

பெரம்பூர் – ஆர்.டி. சேகர்

திருப்போரூர் – செந்தில்

திருவாரூர் – பூண்டி கலைவாணன்

சோளிங்கர் – அசோகன்

குடியாத்தம் – காத்தவராயன்

அரூர் – கிருஷ்ணகுமார்

பாப்பிரெட்டிப்பட்டி – மணி

ஓசூர் – சத்யா

ஆண்டிப்பட்டி – மகாராஜன்

பெரியகுளம் – KS. சரவணக்குமார்

நிலக்கோட்டை – சவுந்தரபாண்டியன்

பரமக்குடி – சம்பத் குமார்

விளாத்திக்குளம் – ஏ.சி. ஜெயக்குமார்

சாத்தூர் – ஸ்ரீநிவாசன்

ஆம்பூர் – வில்வநாதன்

மானா மதுரை – கரூர் காசிலிங்கம்

தஞ்சை – TKG. நீலமேகம்

தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) – கே. வெங்கடேசன்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter