298
முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், கோவா மாநில முதல்வருமான மனோகர் பாரிக்கர் இன்று காலமானார். அவருக்கு வயது 63.
கோவா முதல்வராக பதவி வகித்து வந்தவர் மனோகர் பாரிக்கர். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு கோவா தலைநகர் பனாஜியில் அவருடைய உயிர் பிரிந்தது.
மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மனோகர் பாரிக்கர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். ஐஐடி-யில் படித்த முதல் மாநில முதல்வர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.