Home » மக்களவை தேர்தல் – வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக !

மக்களவை தேர்தல் – வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக !

0 comment

லோக்சபா தேர்தலுக்கு 33 நாட்களே உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் படு பிஸியாக இருக்கின்றன. இந்த நிலையில் அதிமுக- பாமக- பாஜக- தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும், புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமமுக, திமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் அதிமுகவும் இன்று 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வெளியிட்டது.

லோக்சபா அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் :

சேலம்- சரவணன்

நாமக்கல்- காளியப்பன்

கிருஷ்ணகிரி- கேபி முனுசாமி

ஈரோடு- ஜி மணிமாறன்

கரூர்- தம்பிதுரை

திருப்பூர்- எம்எஸ்எம் ஆனந்தன்

பொள்ளாச்சி- மகேந்திரன்

ஆரணி- செஞ்சி ஏழுமலை

திருவண்ணாமலை- அக்ரி கிருஷ்ணமூர்த்தி

சிதம்பரம் (தனி)- சந்திரசேகர்

பெரம்பலூர்- என் ஆர் சிவபதி

தேனி- ரவீந்திரநாத்

மதுரை- ராஜ் சத்யன்

நீலகிரி (தனி)- தியாகராஜன்

திருநெல்வேலி- மனோஜ் பாண்டியன்

நாகப்பட்டினம் (தனி)- தாழை சரவணன்

மயிலாடுதுறை- ஆசைமணி

திருவள்ளூர் (தனி)- வேணுகோபால்

காஞ்சிபுரம் (தனி)- மரகதம் குமரவேல்

தென் சென்னை- ஜெயவர்த்தன்

சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் :

பூந்தமல்லி (தனி)- ஜி வைத்தியநாதன்

பெரம்பூர்- ஆர் எஸ் ராஜேஷ்

திருப்போரூர்- திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம்

சோளிங்கர்- ஜி சம்பத்

குடியாத்தம் (தனி) – கஸ்பா ஆர் மூர்த்தி

ஆம்பூர்- ஜே ஜோதிராமலிங்கராஜா

ஒசூர்- எஸ் ஜோதி (முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி)

பாப்பிரெட்டி – ஏ கோவிந்தசாமி

அரூர் (தனி)- வி சம்பத்குமார்

நிலக்கோட்டை (தனி)- எஸ் தேன்மொழி

திருவாரூர்- ஆர் ஜீவானந்தம்

தஞ்சாவூர் – ஆர் காந்தி

மானாமதுரை- எஸ் நாகராஜன்

ஆண்டிப்பட்டி- ஏ லோகிராஜன்

பெரியகுளம் (தனி)- எம் முருகன்

சாத்தூர் – எம்எஸ்ஆர் ராஜவர்மன்

பரமககுடி (தனி) – என் சதன்பிரபாகர்

விளாத்திகுளம் – பி சின்னப்பன்

உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter