87
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) மற்றும் எஸ்டிபிஐ கூட்டணி கட்சியின் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பேராசிரியர்.P.முருகேசன் அவர்கள் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று (18.03.2019) VVT திருமண மஹால்,பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில், மாவட்டச் செயலாளர் ஆவுரங்சிங் மற்றும் நடராஜ், துணைத்தலைவர் அபுல் ஹசன் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டணி வேட்பாளருக்கு சால்வை அணிவித்து இருவரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் அதிரை நகர அமமுக நிர்வாகிகளும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.