தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். இவர் தற்போது மேகாலயா ஆளுநராக உள்ளார்.
தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். இவர் தற்போது மேகாலயா ஆளுநராக உள்ளார்.
தமிழகம் உட்பட ஐந்து மாநிலத்துக்கு ஆளுநர்களை நியமித்திருக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். தமிழகத்தில் கடந்த ஓராண்டாகத் தனி ஆளுநர் இல்லாமல் இருந்துவந்தார். கடந்த வருடம் ஆளுநர் ரோசையா ஓய்வு பெற்ற பிறகு, வித்தியாசாகர் ராவ் தமிழகத்தின் கூடுதல் ஆளுநர் பொறுப்பைக் கவனித்துவந்தார், எதிர்க்கட்சிகள் தமிழகத்துக்குத் தனி ஆளுநர் நியமிக்காதது குறித்து பல கேள்விகளை விமர்சனங்களாக முன் வைத்தன.
இந்நிலையில், தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பன்வாரிலால் புரோஹித்தை தமிழக ஆளுநராக நியமித்துள்ளார். இவர் தற்போது மேகாலயா ஆளுநராக உள்ளார். இவர், 3 முறை லோக்சபா எம்.பி-யாக இருந்தவர். பார்வர்டு பிளாக், காங்கிரஸிலிருந்து பின்னர் தனிக்கட்சித் தொடங்கி அந்தக் கட்சியை பா.ஜ.க-வுடன் இணைத்தவர். கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
மேகாலயாவில், தஞ்சையைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் சண்முகநாதன், பெண்கள் விவகாரத்தில் சிக்கிப் பதவி இழந்த நேரத்தில் புரோஹித் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வயது 77.
தமிழகத்தில் அதிமுக உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கும் இந்த நிலையில், புதிய ஆளுநர் நியமனம் தமிழக அரசியலில் மாபெரும் திருப்பத்தை உண்டுபண்ணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.