105
அதிராம்பட்டினம் வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர்கள் சாரதா(45) மற்றும் கலா ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை காலை அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது பள்ளிக்கொண்டான் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் திடீரென விபத்துக்குள்ளானது. இதில் கலா என்பருக்கு கால் முறிவு ஏற்பட்டு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.