தஞ்சை ரஸ்கின் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 30 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கலந்துகொண்டனர்.
பல்வேறு கல்லூரிகளிலிருந்து பங்கேற்ற மாணவர்கள், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.
இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அதிராமபட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் BBA துறை மாணவர்கள் தட்டிச் சென்றனர். சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.