Home » பாகிஸ்தானுக்கு போங்க.. கிரிக்கெட் விளையாடிய இஸ்லாமியர்களை கொடூரமாக தாக்கிய கும்பல் !(வீடியோ)

பாகிஸ்தானுக்கு போங்க.. கிரிக்கெட் விளையாடிய இஸ்லாமியர்களை கொடூரமாக தாக்கிய கும்பல் !(வீடியோ)

0 comment

ஹரியானா மாநிலம் குருகிராமின் போண்ட்ஸி பகுதியில் நேற்று கிரிக்கெட் விளையாடிய 4 இஸ்லாமியர்களை அவர்களது வீட்டுக்குள் புகுந்து 30க்கும் மேற்பட்ட சமூக விரோத குண்டர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும், அந்த வீடியோவில், ”இங்க இருக்காதீங்க.. பாகிஸ்தன் போங்க..” என தாக்குதல் நடத்தியவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து வழக்கை பதிவு செய்த போண்ட்ஸி காவல் நிலையம், 6 பேரை கைது செய்துள்ளது.

உதவி ஆணையர் சாம்ஷர் சிங் கூறுகையில், குருகிராமின் பூப் சிங் நகரில் உள்ள இஸ்லாமிய குடியிருப்புக்குள் உள்ளே புகுந்து ஹோலி கொண்டாடிய கும்பல், வீட்டிற்கு வெளியே கிரிக்கெட் விளையாடியவர்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

ஹாக்கி ஸ்டிக், இரும்பு கம்பிகள் மற்றும் உருட்டுக் கட்டைகள் கொண்டு தாக்கியுள்ளனர் . இந்த தாக்குதல் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

இஸ்லாமியர்களை தாக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் உள்நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.

வீடியோ :

https://youtu.be/qgT386TLiWQ

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter