Saturday, April 20, 2024

திருச்சி விமான நிலையத்தில் வாகன நிறுத்தக் கட்டணம் இலவசம்: ஏப். 1 முதல் ஆணையமே வசூல்!!

Share post:

Date:

- Advertisement -

திருச்சி விமான நிலையத்தில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விமான நிலைய ஆணையமே, வாகன நிறுத்தக் கட்டணங்களை வசூலிக்கும் என நிலைய இயக்குநர் கே. குணசேகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியது : திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், வாகன நிறுத்த கட்டணத்தை தனியார் நிறுவனம் வசூலித்து வந்தது. தற்போது விமான நிலைய ஆணையமே வாகன நிறுத்தத்தை நிர்வகிக்க உள்ளது.

கட்டண விவரம்:

விமானநிலையத்துக்குள் சொந்த, வாடகை வாகனத்தில் வந்து, 3 நிமிஷங்களுக்குள் பயணிகளை இறக்கிவிட்டு ஏற்றிச்(பிக்-அப்) செல்ல கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஆனால், வாடகை வாகனங்களில் வந்து பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டுமெனில், விமான நிலையத்துக்குள் நுழைவுக் கட்டணமாக ரூ.40 செலுத்த வேண்டும்.

விமானநிலையத்தில் வாகனங்களை நிறுத்த 30 நிமிடங்கள் வரை:

பேருந்து, டிரக், வேன் – ரூ.30,
கார் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் – ரூ.20,
இருசக்கர வாகனம் – ரூ.10

30 நிமிடத்திலிருந்து 2 மணி நேரம் வரை நிறுத்த

பேருந்து, டிரக், வேன் – ரூ.70,
டெம்போ, எஸ்.யூ.வி, மினி பேருந்து – ரூ.60,
கார் – ரூ.55,
இருசக்கர வாகனம் – ரூ.15

2 மணி நேரத்துக்கு மேல், 7 மணி நேரம் வரை

நான்கு சக்கர வாகனங்களுக்கு தலா ஒரு மணி நேரத்துக்கு ரூ.10,
இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5 கூடுதலாக வசூலிக்கப்படும்.

7 மணி நேரம் முதல் 2 நாள்கள் வரை…:

விமான நிலைய வளாகத்தில் 7 மணி நேரத்துக்கு மேல் 24 மணி நேரம் வரை நிறுத்த

பேருந்து, டிரக், வேன் – ரூ.210,
டெம்போ, எஸ்.யூ.வி, மினி பேருந்து – ரூ.180,
கார் – ரூ.165,
இருசக்கர வாகனம் – ரூ.45

24 மணி நேரத்துக்கு மேல் 36 மணி நேரம் வரை

பேருந்து, டிரக், வேன் – ரூ.315,
டெம்போ, எஸ்.யூ.வி, மினி பேருந்து – ரூ.270,
கார் – ரூ.247.50,
இருசக்கர வாகனம் – ரூ.67.50

48 மணி நேரம் வரை நிறுத்துவதற்கு
பேருந்து, டிரக், வேன் – ரூ.420,
டெம்போ, எஸ்.யூ.வி, மினி பேருந்து – ரூ.360,
கார் – ரூ.330,
இருசக்கர வாகனம் – ரூ.90

பாதுகாப்புக் காரணங்கள் கருதி 48 மணி நேரத்துக்கு மேல் வாகனங்களை நிறுத்தி வைத்திருக்க அனுமதியில்லை.

பயணத்தின்போது 2 நாள்களுக்குள் வர முடியாமல் இருந்தால், அதுகுறித்து வாகனத்தின் ஆர்.சி புத்தக நகலுடன் விமானநிலைய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் கடிதம் அளிக்க வேண்டும்.இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வழியில் நிறுத்தினால் அபராதம் : வாகனங்களை அவற்றுக்குரிய தளத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும்.

வேறு பகுதிகளில் நிறுத்தினால் அபராதம்:
பேருந்து, டிரக், வேன் – ரூ.280,
டெம்போ, எஸ்.யூ.வி, மினி பேருந்து – ரூ.240,
கார் – ரூ.220,
இருசக்கர வாகனம் – ரூ.60 அபராதம் வசூலிக்கப்படும்.

இந்த நடைமுறை 6 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

3 நிமிடம் போதாது: விமான நிலையத்துக்குள் பயணிகளை ஏற்றிஅல்லது இறக்கிவிட வரும் வாகனங்களுக்கு 3 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் விமான நிலையத்தை விட்டு வெளியே வருவது என்பது இயலாத காரியம். எனவே, பழையபடியே கால அவகாசத்தை 5 நிமிடங்களாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...