84
கோவையில் நேற்று 6 வயது சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இதையடுத்து போக்சா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து 10 குழுக்கள் அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளதால் சம்பந்தப்பட்டவரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.