தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான 11வது வார்டில் சுமார் 5 நாட்களாக குப்பைகள் அல்லப்படுவது இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.
அதுமட்டுமின்றி அப்பகுதியில் இதுவரை டெங்கு காய்ச்சல் காரணமாக பலர் தஞ்சையில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அப்பகுதில் சுகாதார துறையினர் பார்வையிட வந்தாலும் இதை கண்டுகொள்ளாமல் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி கொசு மருந்து அடிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
டெங்கு காய்ச்சல் வேகமாக பரவும் நிலையில் இந்த அவல நிலை மாற்றப்படுமா ??