Home » வாக்காளரை கவரும் வகையில் விளம்பரம் செய்தால் ரூ500 அபராதம்!!

வாக்காளரை கவரும் வகையில் விளம்பரம் செய்தால் ரூ500 அபராதம்!!

0 comment

பொது சொத்தின் மீது விளம்பரம் செய்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் விபரம் வருமாறு: அரசு அலுவலக வளாகங்களில் சுவர் விளம்பரம் எதையும் செய்யக்கூடாது. பொதுமக்கள் பார்வைக்கு உரிய இடம் என்பது தனியார் இடம் அல்லது கட்டிடம், புராதன சின்னம், கம்பங்கள், சுவர், வேலி, மரம் மற்றும் ஒரு நபரின் பார்வைக்கு உகந்த அல்லது அதன் வழியே கடந்து செல்ல வசதியான பொது இடங்களும் உட்படும். எந்தவொரு நபரும் எந்த நிலம், கட்டிடம், சுவர், அமைப்பின் மீது சுவர் விளம்பரம், போஸ்டர் ஒட்டுதல், உருவபொம்மை வைத்தல், கைப்பிரதி, நோட்டீஸ், ஆவணம், காகிதம் எதையும் பொதுமக்கள் பார்வைபடும் இடங்களில் வைக்கவோ, ஒட்டவோ கூடாது. தட்டிபோர்டு வைத்தல், வேறு வகை விளம்பரம் எதையும் செய்யக்கூடாது.

உள்ளூர் சட்டங்கள் அல்லது நீதிமன்ற உத்தரவுகள், தடைக்கு உட்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் அவர்களின் முகவர்கள் தொண்டர்கள் தங்கள் வீடு உள்பட சொந்த சொத்துக்களில் சொந்த விருப்பத்தில் எவருக்கும் அசவுகரியம் ஏற்படாத வகையில் பேனர்கள், கொடிகள் கட் அவுட்கள் வைத்துக்கொள்ளலாம். இவ்வகையில் பேனர்கள், கொடிகள், கட்டி விளம்பரம் செய்வதன் மூலம் தனிப்பட்ட வாக்காளரை கவரும் நிலை ஏற்பட்டால் தவறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ500 வரை அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது…

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter