தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்திலுள்ள மல்லிப்பட்டினம் ஜமாத் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைந்து நடத்தும் நாளைய உலகம் நமதாகட்டும் என்ற தலைப்பில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வருகின்ற 05.04.2019 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மல்லிப்பட்டினத்திலுள்ள மதரஸா ஜூம்ஆ பள்ளிவாசல் என்னும் இடத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, ஆலிமா S. நஜ்மா M.A (eng) M.A (arab), நெறியாளர் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம், (இஸ்லாமியதுரை பேராசிரியை – அன்னை கதீஜா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, அம்மாப்பட்டினம்.) அவர்கள் “கல்வியின் அவசியம்” என்ற தலைப்பிலும், பேரா. M. முஹம்மது இஸ்மாயில் M.E.., M.A(edu), (உயர்கல்வி ஆலோசகர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்) அவர்கள் “என்ன படிக்கலாம் எது நம் இலக்கு” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
எனவே மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியில் தவறாது கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு : பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.