அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளூரில் அமைந்துள்ள பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் நீட் மற்றும் ஜேஇஇ நுழைத்தேர்வுக்கான பயிற்சிகள் புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
கோட்டா ராஜஸ்தான் கேரியர் பாயிண்ட் நிறுவனத்தின் சார்பில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இந்த போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சியினுடைய ஆரம்ப விழா மற்றும் நீட் தேர்வு குறித்த மாணவர் பெற்றோர் கருத்தரங்கம் கடந்த புதன்கிழமை பிரிலியண்ட் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் வீ. சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கேரியர் பாயிண்ட் நிறுவனத்தின் நிபுணர் நித்தின் கலந்துகொண்டு நீட் தேர்வின் அவசியம் மற்றும் அதில் வெற்றி பெறுவதற்கான உத்திகளை மாணவர்களுக்கு வழங்கினார். விழாவில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர். நிகழ்வில் முன்னிலை வகித்த பள்ளி முதல்வர் ரகுபதி, இறுதியாக நன்றி கூறினார்.