Home » மதுரையில் ஜாக்கி உதவியுடன் நகர்த்தப்படும் கோவில்!!

மதுரையில் ஜாக்கி உதவியுடன் நகர்த்தப்படும் கோவில்!!

0 comment

மதுரை நத்தம் சாலையில், மேம்பாலம் ஒன்று புதிதாக கட்டப்படுகிறது. இதில் அங்கு உள்ள 100 ஆண்டு பழமையான மந்தையம்மன் கோவில் இடிபடும் சூழல் உருவானது. இதையடுத்து, கோவிலின் பழமை மாறாமல் ஜாக்கி உதவியுடன் நகர்த்தப்பட்டு வருகிறது.

இதற்காக 2 மாதங்களாக ஜாக்கி உதவியுடன் கோவிலை மேலே உயர்த்தும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று முதல் 25 அடி நகர்த்தும் பணிகள் நடைபெறுகிறது. 4825 சதுர அடி பரப்பளவும், 350 டன் எடை கொண்ட கோவிலை 350 ஜாக்கிகளின் உதவியுடன் நகர்த்தப்பட்டு வருகிறது. 25 லட்சம் செலவில் நடைபெறும் இந்தப் பணிகள் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 30 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter