புது புது தொழில்நுட்ப வசதியுடன் இன்று இருசக்கர வாகனங்களின் வருகை விற்பனை சந்தைக்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றன..காரணம் இளைஞர்களின் ஆர்வமும்,அவர்களின் வாங்கும் சக்தியும் தொழில் நிறுவனங்களை போட்டி போட வைக்குன்றன…..
விலை அதிகமாகவும்,ஆனால் அந்த பொருட்களின் தரத்தை நாம் ஒப்பிடும் பொழுது மிகவும் குறைவாக இருக்கிறது…..
கடந்த சில வருடங்களாக நாம் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் பார்க்கும் போதும் விபத்து சம்பவங்களும்,இளைஞர்களின் மரண செய்திகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றன…
வெளிநாடுகளில் கடுமையாக உழைத்து
வருகின்ற வருமானத்தில் மகனின் ஆசையை நிறைவேற்றும் வாங்கி கொடுக்கும் வாகனமே பேராபத்தாகி விடுவது பெற்றோரின் மனதை பெரிதளவில் பாதிக்கிறது….
மேலும் வாகனம் ஓட்டும் போது வேகமாக வரும் இளைஞர்களுக்கு அச்சம் இருக்கிறதோ இல்லையோ அதை பார்க்க கூடிய நமக்கு ஒருவித அச்சம் ஏற்படுகிறது….
நான் நேரடியாக பார்த்த ஒரு அப்பாவி இளைஞனின் கடைசி நிமிடங்கள் ஏழ்மையான கல்லூரி மாணவன் தன்னுடைய நண்பனுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறார்.அவரை எதிர்நோக்கி மிகவேகமாக இன்னொரு இருசக்கர வாகனம் மோதியதில் அந்த இருவரில் ஒருவர் பலத்த காயமடைந்து மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் நேரத்தில் உயிர் பிரிந்தது.
வீட்டிற்கு ஒரே பிள்ளை,அந்த பையனின் எதிர்காலத்தை நம்பிதான் அந்த குடும்பம் இருந்தது…..
இதுபோன்ற சம்பவங்கள் ஏராளமாக உள்ளன.ஆகவே நம்முடைய உயிர் விலைமதிப்பற்றது.தானும் பாதிப்படைந்து,மற்றவர்களுக்கும் நோவினை கொடுக்கும் இந்த அதிவேக பயணம் வேண்டாம்!!!
சிந்திப்போம்!!