48
அதிராம்பட்டினம்: மதசார்பற்ற ஜனநாயக கூட்டனியான திமுக தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளர் S.S. பழனி மானிக்கத்தை ஆதரித்து கூட்டனி கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கூட்டனி கட்சியான மமகவின் சார்பில் ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதன்படி தஞ்சை தெற்கு மாவட்ட மமக சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் செ.ஹைதர் அலி கலந்துகொண்டு உறையாற்றுகையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட, மோடி ஆட்சி அகல திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பது கட்டாயம் என கூறினார்.
முன்னதாக செந்தலைப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.