81
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டிணத்தில் இன்று(10/04/2019) அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாடாமன்ற தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் முருகேசனுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு அதிரை மாணவர் சங்கத்தின் நிர்வாகிகளை நேரில் சந்தித்தனர்.
அதிரை அமமுகவினர் மாணவர் சங்க நிர்வாகிகளை நேரில் சந்திக்கையில் அமமுக தஞ்சை மாவட்ட செயலாளர் மா.சேகர் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆதரவு திரட்டினார்.
மேலும், கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து வசதிகள் போன்றவைகள் செய்துதரப்படும் எனவும் வாக்குறுதி அளித்தனர்.
இந்நிகழ்வில், அதிரை மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்..